திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 இலட்சம் நிதியுதவி; நேரடியாக மக்களிடம் வழங்கிய நடிகர் விஜய்.!!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை காரணமாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதிக்கு மேல் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டன.
இதனால் பல வீடுகள், சாலைகள் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துபோனது. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகர், மாதா மாளிகை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், வீடுகள் சேதமடைந்தது மற்றும் முற்றிலும் ஏற்பட்ட பாதிப்புகளை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் நிதி உதவி வழங்கியுள்ளார்.
மேலும் அங்கு வந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. நிவாரண உதவி அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.