மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?!" வைரலாகும் புகைப்படங்கள்!
1984ம் ஆண்டு "வெற்றி" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜய். தொடர்ந்து 1988ம் ஆண்டு "இது எங்கள் நீதி" என்ற திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், அதன் பின்னர் 1992ம் ஆண்டு "நாளைய தீர்ப்பு" படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த "பூவே உனக்காக" திரைப்படம் தான் விஜயின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை 67 படங்களில் நடித்துள்ள விஜய், தமிழக அரசின் விருதுகள், எடிசன் விருது, விஜய் விருதுகள், சிமா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான "லியோ" திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "தளபதி 68" என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பிரபல நடிகர்களின் சிறு வயதுப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். அந்தவகையில் தற்போது நடிகர் விஜயின் சிறு வயதுப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நம்ம தளபதியா இது என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் அந்தப் புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.