திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உற்சாகத்தில் துள்ளிக்குதித்த ரசிகையை அண்ணனாக அரவணைத்த விஜய்.! வைரலாகும் காணொளி.!!
கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், பல வீடுகளும் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க நேரில் சென்றார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கிய நிலையில், நிவாரண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
Andha hair uh edhuna seevitu poirukalam😉
— Vinith❤Tammy (@ViniSayz) December 30, 2023
இந்நிலையில் தன்னை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ரசிகை ஒருவரை அழைத்து நடிகர் விஜய் பேசினார். அப்போது உற்சாக மிகுதியில் ரசிகை விஜயுடன் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
மேலும் அவரை அன்புடன் அரவணைக்கவும் செய்தார். இது நடிகர் விஜயின் முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் அண்ணன் - தங்கை பாசம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பாராட்டி விஜயின் முகபாவனையை ரசித்து வருகின்றனர்.