மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விக்ரமின் தந்தை இந்த பிரபல நடிகரா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனது நடிப்பு திறமையை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார்.
இவர் தமிழில் முதன் முதலில் என் காதல் கண்மணி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனை அடுத்து சேது திரைப்படத்தில் தன் அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார் விக்ரம். மேலும் இவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் விக்ரமின் தந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விக்ரமின் தந்தையும் ஒரு நடிகரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். விக்ரமின் தந்தை கில்லி திரைப்படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது