அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
"தாடியால் மணிரத்னம் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்!" யார் தெரியுமா?
ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களிலும், மாடலிங் துறையிலும் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விக்ரம். இதுவரை பல பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் விக்ரம்.
1990ம் ஆண்டு "என் காதல் கண்மணி" என்ற படத்தில் அறிமுகமான விக்ரம், இதையடுத்து மேலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் 1999ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த "சேது" திரைப்படம் தான் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து படத்திற்குப் படம் வித்தியாசமாகவும், தன் உடலை வருத்திக்கொண்டும் நடித்து வரும் விக்ரம் தற்போது வரை தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கும் "தங்கலான்" படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படமான "பம்பாய்" படத்தில் முதலில் விக்ரமை தான் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினாராம். ஆனால் அப்போது வேறு படத்தில் அவர் தாடியுடன் நடித்து கொண்டிருந்ததால், பம்பாய் படத்தில் தாடியில்லாமல் நடிக்க சொன்னதால் விக்ரம் மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.