மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒத்த சொல்லால".. திரிஷா கூறிய ஒரு வார்த்தை.. கெட்ட வார்த்தையாக எண்ணி விக்ரம் கொடுத்த ஷாக் ரியாஷன்..! வைரல் வீடியோ..!!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேடித்தேடி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் இப்படத்தின் ப்ரமேஷனுக்காக படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திலும் பேட்டியளித்திருந்தார்கள். அந்த வகையில் வட இந்தியாவுக்கு சென்றபோது, மிகப்பிரபலமான கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#PonniyanSelvan1 #PS1Tamil @chiyaan @trishtrashers @Karthi_Offl @actor_jayamravi pic.twitter.com/vEYs4tM7mN
— Beast (@cskvijay007) October 4, 2022
அதில் விக்ரம், திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் கேள்வியாக கேட்கப்பட்டது, மேலும் சில விளையாட்டுகளையும் படக்குழுவினர் விளையாடினர். அப்பொழுது நிகழ்ச்சியில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஒருவர் சொல்வதை மற்றொருவர் அப்படியே கேட்டு சொல்லவேண்டும்.
அந்த நிகழ்ச்சியில் ஹிந்தியில் சில வார்த்தைகளை கூறியிருந்தனர். அப்போது திரிஷா அவர்கள் "குத்தா" என்ற வார்த்தையை சொன்னதும், அதைக்கேட்ட விக்ரம் கெட்டவார்த்தை என நினைத்துக்கொண்டு கொடுத்த ஷாக் ரியாக்ஷன் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
Vikram 😂 pic.twitter.com/E8r7hO5gH2
— ராஸ்கல் (@Rascal1_) October 4, 2022