மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்ராந்த், யோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்: அப்டேட் இதோ.!
பிக் பேங் சினிமாஸ் தயாரிப்பில், வில் அம்பு திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கத்தில் திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படம் பிக் பேங் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் ஆகும்.
இப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட பூஜையானது இன்று போடப்பட்டது.
இந்த பூஜையின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணியும் நேரில் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார். நடிகர் விதார்த்தின் நடிப்பில் வெளியான முதல் கனவே, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு, தாக்க தாக்க, கவண், வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.