#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என் குடும்பம் ஆசைப்பட்டதை செய்ய முடியல" மேடையில் கண் கலங்கிய நடிகர் விமல்..
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் விமல். இவர் தமிழில் முதன் முதலில் விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்குப் பிறகு கிரீடம், குருவி, காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். முதன் முதலில் கதாநாயகனாக 'பசங்க' திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் வெளியான களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, மஞ்சப்பை, வாகை சூடவா போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தன. தற்போது ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய போது மறைந்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவுடன் இணைந்து என் குடும்பத்தார் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்கு முன்பு அவருக்கு இப்படி ஆகிடுச்சு என்று கண் கலங்கி பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.