Actor Vimal: எனக்கு நெஞ்சுவலியா?.. மதுப்பழக்கத்திற்கு அடிமையானேனா? - பதறிப்போய் நடிகர் விமல் பரபரப்பு வீடியோ வெளியீடு.!

நடிகர் விமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் நெஞ்சு வழியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் விமல் உண்மையை தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என செய்தி வந்ததை அறிந்தேன். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். இயக்குனர் மைக்கேலுடன் கைகோர்த்துள்ளேன். படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மதுபானத்திற்கு நான் அடிமையானதாக செய்திகள் வெளியாகின. அவை முற்றிலும் தவறான செய்திகள். நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இதனை யார்? எதற்காக? செய்கிறார்கள் என்பது தெரியாவில்லை. அவரவரின் வேலையை பார்ப்பது நல்லது. வேண்டாத விஷக்கிருமிகள் இவ்வாறு செய்வதாக அறிகிறேன்.
அவரால் யார் என எனக்கு தெரியும். நீங்களும் வாழுங்கள்., என்னையும் வாழவிடுங்கள். தேவையில்லாமல் சில்லறை வேலைகள், விடீயோக்களை பதிவிட்டு யாரையும் காயப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்தார்.