திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த சிறுவன் எந்த முன்னணி நடிகர் தெரியுமா.!? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஷால். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து தமிழில் நடித்து பல ஹிட் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு அளித்தார். மேலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் விஷால், தற்போது அரசியலிலும் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆக்சன் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த முக்கிய நடிகர்களில் விஷாலும் ஒருவர்
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, துப்பறிவாளன், ஆம்பள, பூஜை அவன் இவன் போன்ற பல ஹிட் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. சமீப காலமாக தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை அளித்து வந்த விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றி பெற்றார்.
இவ்வாறு திரைத்துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகராக இருந்து வரும் விஷால், அவ்வப்போது தனது பேச்சால் சர்ச்சையையும் ஏற்படுத்தியும் உள்ளார். தற்போது நடிகர் விஷாலின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.