திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மன்னிச்சிடு சாமி.. கண்டிப்பா அது நடக்கும்.! விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் விஷால்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத பலரும் சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பி உள்ள நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாக ஒரு மனிதர் மறைந்த பின்புதான் அவரை சாமி என கூறுவோம். ஆனால் கேப்டன் உயிரோடு இருக்கும்போதே பலரும் அவரை சாமி என கொண்டாடியுள்ளனர். அவர் அவ்வளவு நல்லது செய்துள்ளார். என்னால் கேப்டனின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. என்ன செய்வது என தெரியாமல் வருத்தப்பட்டேன்.என்னை மன்னிச்சிடு சாமினு தான் நான் சொல்லணும்.
மேலும் அவரிடம் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து கேட்டதற்கு, விஜயகாந்த் அண்ணனின் பெயர் கண்டிப்பாக நடிகர் சங்கத்திற்கு வைக்கப்படும். அதற்கு எதிராக யாரும் எந்த கருத்தும் கூற மாட்டார்கள். நடிகர் சங்கத்திற்காக அவரது உழைப்பு சாதாரணம் கிடையாது என கூறியுள்ளார்.