திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
500 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால்: சென்னை திரும்பிய முதல் நாளே நெகிழ்ச்சி.!
மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக தலைமை அலுவலக நினைவிடத்திற்கு, பல திரைத்துறை நட்சத்திரங்களும் நேரில் வந்து தங்களின் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விஜயகாந்தின் மறைவின்போது அமெரிக்காவில் இருந்த நடிகர் விஷால், வீடியோ வாயிலாக தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, இன்று அவர் தாய்மண் திரும்பினார்.
இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம், விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செய்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், அங்கு வந்த பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது நடிகர் ஆர்யாவும் விஷாலுடன் இருந்தார்.