மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேஜிஎஃப் 2 ராக்கி பாய்.. நடிகர் யாஷின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!!
உலகம் முழுவதும் தற்போது வெற்றிகரமாக ஓடி, பெரும் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் கொடுத்துள்ள திரைப்படம் கே.ஜி எஃப் 2. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஹீரோவாக யாஷ் நடித்துள்ளார். இதன் முதல்பாகம் 2018ஆம் ஆண்டு வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற்று செம ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக கேஜிஎஃப் 2 இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா படமான இது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மேலும் கேஜிஎஃப் படத்தின் மூலமாக நடிகர் யாஷ் உலகம் முழுவதும் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். பல மொழிகளிலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது யாஷின் சொத்து மதிப்பு ரூ. 53 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் இவர் வசிக்கும் வீடு மட்டும் ரூ 6 கோடி என கூறப்படுகிறது. மேலும் விளம்பர மாடலிங்களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும். கேஜி எஃப் ரிலீசுக்கு முன்பு 4 முதல் 5 கோடிவரை சம்பளம் பெற்ற யாஷ் தற்போது, கே ஜி எஃப் 2 படத்திற்காக ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்றும் தகவல் வெளிவந்துள்ளது.