மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வானம் படத்தில் சிம்பு மற்றும் பரத் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்களா! பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் வானம். 2011ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கிரிஷ் இயக்கியிருந்தார். மேலும் பரத், அனுஷ்கா, சரண்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே ஒரு படத்திற்கான கதையை எழுதும்போது இயக்குனர்கள் யாராவது ஒரு ஹீரோவை தங்களது மனதில் வைத்துக் கொண்டுதான் கதையை எழுதுவர். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போகும். அதனால் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் மாற்றப்படுவர்.
அவ்வாறு வானம் திரைப்படத்திலும் நடிகர்கள் மாற்றம் நேர்ந்துள்ளது. முதலில் வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜீவாவும், பரத் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனராம். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே சிம்பு மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர் என தற்போது தகவல்கள் பரவி வருகிறது.