திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தூக்கி போட்டு மிதிக்க தான் நிறையபேர் இருக்காங்க" - திரைத்துறை குறித்து தமிழ் நடிகை ஆதங்கம்..!!
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படம் நாளை திரையரங்கில் ரிலீசாக உள்ளது. படத்தை இயக்குனர் சார்லஸ் இயக்கினார்.
ஆரம்ப கட்டத்தில் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்த நடிகை, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "நம்மைப் போன்ற கடுமையாக உழைப்பவரை மேலே கை தூக்கி விட யாரும் இருக்க மாட்டார்கள்.
ஒரு சிலர் இருக்கலாம். நம்மை தூக்கி போட்டு மிதிக்க, கீழே கொண்டு செல்ல அதிகபேர் இருக்கின்றனர். அவற்றைத் தாண்டி நாம் வளர்வது மிகப்பெரிய சவால்" என்று தெரிவித்தார்.