மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நானும் விக்ரமும் அந்த விஷயத்துல தான் ஒன்னு சேர்ந்தோம்.. நடிகை ஐஸ்வர்யாவின் மனம் திறந்த பேட்டி.?
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளாவர். 1989 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான 'அடவிலோ அபிமன்யு' திரைப்படத்தில் நடித்து சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின்பு தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான 'ராசுக்குட்டி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தொழிலாளி, தையல்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பிடித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா, நடிகர் விக்ரமுடன் இணைந்து 'மீரா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது, " இந்த படத்தின் படபிடிப்பின் போது நானும் விக்ரமும் கீரியும் பாம்பும் போல சண்டை போட்டுட்டே இருப்போம். இப்பிடி இருந்தா ரொமன்ஸ் சீன் எப்பிடி எப்பிடி நல்லா வரும்ன்னு எங்களை இயக்குநர் திட்டுவாரு. இதன்பின் ரொமன்ஸ் நல்லா வரனும்னு இயக்குநரே முன்வந்து எங்களை சேர்த்து வச்சாரு" என்று கூறிய பேட்டி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.