மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டபட்ட நடிகை அமலா.! உதவிக்கரம் நீட்டிய கேப்டன் விஜயகாந்த்..
தமிழ் திரையுலகில் 90களின் ஆரம்பத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா. மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் அமலா நடிப்பில் வெளியான மைதிலி என்னை காதலி, கண்ணே கனியமுதே, மெல்ல திறந்தது கதவு போன்ற படங்கள் பெரிய ஹிட்டானது.
அமலாவிற்காகவே படம் பார்க்க வரும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. இதன்பின் இவர் படங்களில் நடித்து இருக்கும்போதே தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அமலா, தற்போது விலங்குகளின் மேலிருக்கும் ஆர்வத்தால் புலு கிராஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்படி இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்பேட்டியில் அமலா, "சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சாப்பாடுக்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தான் காலேஜ் பீஸ் கட்டுவேன். அச்சமயத்தில் விஜயகாந்த் அவர்கள் தான் எனக்கு உதவி செய்தார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.