மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷாலை ஓங்கி உதைத்து கீழே தள்ளிய பிரபல நடிகை! அதிர்ச்சியில் ஆடிப்போன விஷால்.! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் அம்பிகா. டாப் ஹீரோயினாக ஜொலித்த நடிகை அம்பிகா தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது அவர் நாயகி என்ற சீரியலிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் கலர் தொலைக்காட்சியில் காமெடி நைட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் அவருக்கு சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் விஷாலும், அம்பிகாவும் நடித்த அவன் இவன் படத்தின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு அதுகுறித்து கேட்கப்பட்டது.
இதை பார்த்ததும் அம்பிகா நான் என் சினிமா அனுபவத்தில் அதுவரை நடிப்பில் கூட யாரையும் அடித்ததில்லை.ஆனால் இந்த படத்தில் நடித்தபோது விஷாலை எட்டி உதைக்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது .
அப்பொழுது நான் விஷாலிடம் மிகவும் தயக்கமாக எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது, எனவே நான் லேசாக காலை அசைத்து உதைப்பது போல செய்கிறேன். நீங்கள் கீழே விழுந்து சமாளித்துக்கொள்ளுங்கள் என கூறினேன்.
ஆனால் அவரோ அதெல்லாம் பரவாயில்லை நீங்க உதையுங்கள் என்றார். மேலும் இயக்குனர் பாலாவும் நீங்கள் உதையுங்கள் என கூறினார்.அதனால் நானும் ஓங்கி எட்டி உடைத்தேன். ஆனால் உண்மையிலே விஷால் உருண்டு கீழே விழுந்துவிட்டார்.பின்னர் அவரும் பேச்சுக்காக சொன்னால் இப்படியா என அதிர்ச்சி அடைந்துவிட்டார் என அம்பிகா கூறியுள்ளார்.