#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐபோன் பரிசா?.. அவங்கள நம்பாதீங்க., ஏமாத்துறாங்க - பிரபல குழந்தை நட்சத்திரம் ரசிகர்களுக்கு அலார்ட்..!!
விஜய்யின் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அம்மு அபிராமி. இப்படத்திற்கு பின் அவர் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
இவர் தனது பெயரில் தொடங்கிய யூடியூப் சேனலில் அவ்வப்போது வீடியோ பதிவு செய்து வருவது வழக்கம். இந்த நிலையில், மர்ம நபர் அவரது யூடியூப் சேனலின் லோகோவை பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். இணையவழியில் மர்ம நபர் அம்முவின் லோகோவை பயன்படுத்தி ஒருவருக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரும் அம்மு தான் கூறுகிறார் என நம்பி, ரூ.7 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பின்னர் நாட்கள் கடந்தும் ஐபோன் வராத நிலையில், அவர் தான் ஏமாற்றப்பட்டதை அம்முவிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர்தான் அம்முவிற்கு விஷயம் தெரியவந்துள்ளளது. மேலும், தனது ரசிகர்கள் கவனமாக இருக்குமாறும் அம்மு வேண்டுகோள் வைத்துள்ளார்.