மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் அப்பாவின் கண்முன்னே பேருந்தில் இப்படி நடந்தது" கண் கலங்கிய ஆண்ட்ரியா.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல், பாடகியாகவும் பல ஹிட் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகையாகவும் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
குறிப்பாக இவர் ஆரம்பத்தில் நடித்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்திலிருந்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சிறந்து விளங்கினார். தற்போது தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கும் ஆண்ட்ரியா இறுதியாக புஷ்பா படத்தில் பாடிய ம்ம் சொல்றியா மாமா என்ற பாடல் தற்போது வரை பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்ட்ரியா அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். மேலும் இது குறித்து பேசிய அவர், முதல்முறையாக பாலியல் சீண்டல் நடந்ததை பற்றியும் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, " எனக்கு 11 வயது இருக்கும் என் அப்பாவுடன் பேருந்தில் சென்றிருந்தேன்.
என் அப்பா என் அருகில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஒருவன் என் டி ஷர்ட் உள்ளே கையை விட்டான். அப்போது அது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் அழுகையாக வந்தது. பயத்தினால் யாரிடமும் சொல்லவில்லை" என்று கூறியிருந்தார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது போல பல பெண்களுக்கும் தினமும் பேருந்தில் பாலியல் சீண்டல் நடைபெறுகிறது. இதை குறித்து தைரியமாக வெளியில் பேசினால் தான் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.