மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வித்தியாசமாக போட்டோ சூட் செய்து ரசிகர்களின் மனதை கட்டியிழுக்கும் அனுபமா.!?
மலையாள திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் முதன் முதலில் பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் பிரேமம் திரைப்படத்தில் அனுபமாவின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இப்படத்திற்கு பின்பு தமிழ் திரை துறையில் காலடி எடுத்து வைத்தார் அனுபமா. முதல் திரைப்படத்திலேயே தனுஷ் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் பெருந்தளவில் வெற்றி பெறவில்லை.
இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் திரைப்படங்கள் தொடர்ந்து நடிக்க கவனம் செலுத்தி வந்த அனுப்பமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவி விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவா நடிகையாக இருந்து வரும் அனுபமா அடிக்கடி போட்டோ சூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். தற்போது வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.