மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனது வாழ்க்கையில் கிடைத்த முக்கியமான பரிசு இது" நடிகை அனுபமாவின் உருக்கமான பேச்சு.!?
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் முதன்முதலில் பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும் பிரேமம் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்திற்கு பின்பு தமிழில் காலடி எடுத்து வைத்த அனுபமா, முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் இப்படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டியில் அனுப்பமா பரமேஸ்வரன், "இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இது இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இந்த படத்தில் நடிக்கும் சக நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.