மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிவகார்த்திகேயன் மீது தப்பு இருக்கா?? டி இமான் கிளப்பிய பெரும் சர்ச்சைக்கு பிரபல நடிகை பளீச் பதில்!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தனது உழைப்பால் முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவந்த மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்து இசையமைத்தவர் டி இமான். அவர்கள் இருவரும் சமீப காலமாக எந்த படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் டி இமான், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரும் துரோகம் செய்துவிட்டார். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற போவதில்லை. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதனை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் டி இமான் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன்தான் காரணம் என அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனுபரமி பேட்டி ஒன்றில், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவரது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றால், விவாகரத்து செய்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இமான் ஏன் தற்போது இந்த விஷயத்தை பற்றி கூற வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் மீது தவறு உள்ளதா? இல்லையா? என தெரியாமல் சிலர் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.
ஒரு தொகுப்பாளராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தூண்டிவிட்டுதான் இமான் இவ்வாறு செய்துள்ளார். இமான் தன் குழந்தைகள் மீதுள்ள பாசத்தால் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியே சொல்லவில்லை என கூறுகிறார். ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? யாராக இருந்தாலும் தயவுசெய்து அந்தரங்க விஷயத்தை வெளியே பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளார்.