மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. SMS பட நடிகை அனுயாவா இது.! அடையாளமே தெரியாம இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகை அனுயா. முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நடிகை அனுயா மதுரை சம்பவம், நஞ்சுபுரம், நகரம் மற்றும் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தமிழ் பேச தெரியாத காரணத்தினாலேயே அவர் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியை விட்டு எலிமினேட்டானார்.
அதனைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. மேலும் எந்த திரையுலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் தற்போது நடிகை அனுயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை அனுயா ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளார்.