மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர் கேட்ட கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த ஜீவா பட நாயகி.!
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை அனுயா. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரசிகர்களிடையே இவர் பிரபலமாக தொடங்கினார். இதனை தொடர்ந்து, நகரம், மதுரை சம்பவம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இதன் பின்னர் சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து, வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனுயா. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இவர் பங்கேற்றிருந்தார். இந்த சூழ்நிலையில் நடிகை அனுயா அண்மையில், பேசிய ஒரு விவகாரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, நான் துபாயில் பிறந்தவள் எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும். படிப்பை முடித்தவுடன் நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். ஜீவா, விஜய் ஆண்டனி, சுந்தர்.சி ஆகியோருடன் இணைத்து என்னை தவறாக பேச தொடங்கியுள்ளனர். அவை அனைத்துமே தவறான தகவல்கள். நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார் நடிகை அனுயா.
ஏன் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை அனுயா. இந்த விவகாரம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.