தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
திருப்பதி தேவஸ்தானத்தில் நேர்ந்த அவமானம்! ஆக்ரோஷத்துடன் பிரபல நடிகை பரபரப்பு புகார்!! வைரலாகும் வீடியோ!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், நடிகையுமான அர்ச்சனா கவுதம் ஆக்ரோசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை அர்ச்சனா கவுதம். அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். அவர்
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த வாரம் திருப்பதி சென்றுள்ளார். அப்பொழுது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெறுவதற்காக அவர் செயல் அதிகாரி அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக நடந்துக்கொண்டதாகவும், பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கிய பிறகு ரூ.500 செலுத்தி வி.ஐ.பி. டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
भारत के हिंदू धर्म स्थल लूट का अड्डा बन चुके हैं धर्म के नाम पर तिरुपति बालाजी मैं महिलाओं के साथ अभद्रता करते,यह टीटीडी के कर्मचारी पर कार्यवाही होनी चाहिए । मैं आंध्र गवर्नमेंट से निवेदन करती हूं।ओर यह VIP दर्शन के नाम पर 10500 एक आदमी से लेते है । इसे लूटना बंद करो । @INCIndia pic.twitter.com/zABFlUi0yL
— Archana Gautam (@archanagautamm) September 5, 2022
இந்நிலையில் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என அவமானப்படுத்தியதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.