#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலாவின் காலில் விழுந்து கதறிய லைலா.. வெளியான காரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
1999ம் ஆண்டு வெளியான 'சேது' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. இவர் பாலுமகேந்திராவிடம் பாடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் பாலா 'பி ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார்.
2008ம் ஆண்டில், 'நான் கடவுள்' படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது இயக்குனர் பாலாவுக்கு கிடைத்தது. இவர் இயக்கிய 'பிதாமகன்' படத்தில் நடித்த விக்ரமுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
முன்னதாக பாலா இயக்கிய 'நந்தா' படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில், நந்தா படத்தில் நடித்த நடிகை லைலாவுக்கு ஈழத்தமிழ் சரியாக பேசவரவில்லை என்றும், அதற்காக பாலா மிகுந்த டென்ஷன் ஆகியுள்ளார். எனவே இனி என்னால் நடிக்க முடியாது என்று லைலா அழுதுள்ளார் என்றும் தெரிகிறது.
மேலும், பாலா மிகச் சிறந்த இயக்குனர், இப்படத்தில் நடித்தால் உனக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும் என்று பலரும் லைலாவிடம் கூறியுள்ளனர். பின்னர் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்த லைலா, பாலாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.