தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாததால் விஜய்யுடன் டூயட் பாடும் வாய்ப்பு போச்சு.!வேற லெவலில் ஆகிருப்பேன்! புலம்பும் நடிகை!!
சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரபலமான வாரிசு நடிகைகளுக்கே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் தாங்கள் பெரிய பட வாய்ப்புகளை இழந்ததாகவும் பல நடிகைகள் பேட்டிகளில் வருந்தியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள நடிகை பாலாம்பிகா அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் தான் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடிகை ஷகீலா பேட்டியில் பங்கேற்ற நடிகை பாலாம்பிகா கூறுகையில், எனக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் அப்பா வேண்டாம் என மறுத்துவிட்டார். விஜய் மற்றும் பிரசாந்த் படங்களில் நடிக்கக் கூட வாய்ப்பு வந்தது.
ஆனால் அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிலைமை வந்ததால் அப்படி ஒன்றும் நடிக்க வேண்டாம் என எனது அப்பா கறாராக மறுத்துவிட்டார். அதனால் விஜய் பட வாய்ப்பு இழந்துவிட்டேன். அவருடன் நடித்திருந்தால் எனது லெவல் வேற மாதிரி இருந்திருக்கும் என புலம்பியுள்ளார்.