பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்.. 42 வயதிலும் மாடர்னாக செம ஸ்டைலாக நடிகை தேவயானி! யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல!!
தமிழ் சினிமாவில அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதல் கோட்டை படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதனை தொடர்ந்து இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகை தேவயானி சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த தொடர் 6 ஆண்டுகள் ஒளிபரப்பாகி செம ஹிட்டானது.
இந்த நிலையில் தற்போது தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை தேவயானி பேன்ட் சர்ட் அணிந்து மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் 42 வயதிலும் மாடர்ன் உடையில் செம யங்காக இருக்கிறீர்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.