மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை.! ஆனால்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது சுவாரசியமாகவும், நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஜனனியின் ஆச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டி.கே கலா. பின்னணி பாடகியாவார்.
மேலும் அவர் கில்லி, குருவி, ஐ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடித்திருந்த அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது கில்லி படத்தின் மூலம்தான் முதல்முறையாக நடிக்க தொடங்கினேன். என்னுடைய காட்சிகளில் நடித்தது எனக்கு கஷ்டமாக இல்லை. தற்போது படம் ரீ_ரிலீஸ் ஆன நிலையில் நான் பேசிய சில டயலாக்குகள் மீண்டும் வைரலாகி வருகிறது என பகிர்ந்திருந்தார்.
மேலும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து பேசிய அவர், முதலில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும்போது எனக்கு விருப்பம் இல்லாமல்தான் சம்மதம் கூறினேன். இந்த சீரியலில் நடிக்க எனக்கு ஒரு முக்கியமான நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதனால் அதனை என்னால் மறுக்க முடியவில்லை. விருப்பமில்லாமல்தான் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினேன். ஆனால் சீரியலில் நடிப்பது பெரியளவில் கஷ்டமாக இல்லை. இயல்பாக இருப்பது போல்தான் உள்ளது என்று டி.கே கலா கூறியுள்ளார்.