பிரபல பழம்பெரும் நடிகை மாரடைப்பால் மரணம்! திரையுலக பிரபலங்கள் இரங்கல்!!



actress gemini rajalakshmi passed away

பிரபல பழம்பெரும் நடிகை 94 வயது நிறைந்த ஜெமினி ராஜேஸ்வரி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஸ்வரி அவர்கள் மேடை நாடகங்கள் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். இவர் 1000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் நடன  நடிகையாக அறிமுகமான இவர் 400 படங்களுக்கு மேல் நடனமாடியுள்ளார். பின்னர் காதல் படுத்தும் பாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானார்.

rajalakshmiஅதனைத் தொடர்ந்து அவர் 16 வயதினிலே,  சின்ன வீடு, மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள்,  இது எங்க நாடு, உனக்காக நான், திருடன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன், எதிர்நீச்சல் மற்றும் கயல் போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 16 வயதினிலே படத்தில் இவர் பேசிய 
'ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்குறவளாச்சே’ என்ற வசனம் இவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய  செய்தது.

இந்நிலையில் 94 வயதான நிலையில் வயது முதுமையின் காரணமாக வீட்டில் இருந்த நடிகை ராஜேஸ்வரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.