திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கிறேனா" கடுப்பான விஜய் சேதுபதி பட நடிகை.!?
2018 ஆம் வருடம் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடினார்கள். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு இந்த படம் அமைந்துள்ளதால் பல ரசிகர்களும் திரைப்படத்தை பாராட்டி வந்தனர்.
மேலும் 96 திரைப்படத்தில் திரிஷாவின் ஜானு கதாபாத்திரத்தில் சிறிய வயது ஜானுவாக நடித்தவர் கௌரி கிஷன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்திற்கு பின்பு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், தனுஷ் நடிப்பில் கர்ணன், அடியே போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கௌரி கிஷன், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். சமீப காலமாக இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்திற்கு பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு உள்ளீர்களா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த கௌரி கிஷன், "பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறீர்களா? என்ற கேள்வி மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. எனக்கு மட்டுமல்ல பல நடிகைகளும் இந்த கேள்வியை எதிர்கொள்கிறார்கள்.