திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
90ஸ் இளசுகளின் கனவுக்கன்னி, இதயம் நாயகி ஹீரா இப்போ எப்படி இருக்காங்க? என்ன செய்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முரளி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இதயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹீரா. இப்படத்தின் மூலம் இவர் பெருமளவில் பிரபலமாகி, இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்தது.
அதனை தொடர்ந்து ஹீரா அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும், சரத்குமாருடன் தசரதன், கமலின் அவ்வை ஷண்முகி, சதிலீலாவதி மற்றும் திருடா திருடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். ஹீரா கடந்த 2002ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2006ஆம் ஆண்டு பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாத அவர், பெண்களுக்கென அமைப்பு ஒன்றை நிறுவி பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அவர்களுக்காக போராட்டத்திலும் ஈடுபடுகிறார். மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கு ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.