மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீயாய் பரவிய பொய்யான செய்தி.! விளக்கமளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.! என்னனு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பிகளின் பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் ஸ்டாலின், வெங்கட் ரங்கநாதன், குமரன், சுஜிதா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஹேமா. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்னும் சில நாட்களில் முடிவிற்கு வரவுள்ளது. மேலும் அதன் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ அண்மையில் வெளியானது.
இதற்கிடையில் இரண்டாம் பாகத்தில் நடிகை ஹேமாவும் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து நடிகை ஹேமா, தயவுசெய்து பாண்டியன் ஸ்டோர்ஸ்-2ல் நான் இருப்பதாக தவறான செய்தியை பரப்பாதீர்கள். இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. அப்படி எதாவது நல்ல விஷயங்கள் நடந்தால் மகிழ்ச்சியுடன் அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.