மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அட்ஜஸ்ட் செய்யணுமோ என்று பயந்தேன்" மேடையில் உண்மையை கூறிய நடிகை!
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ள இனியா, 2010ஆம் ஆண்டு தமிழில் "பாடக சாலை" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின்னர், இனியா தமிழில் தொடர்ந்து வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி, யுத்தம் செய், மௌன குரு, மாசாணி என பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் தொடர்ந்து நடித்துவரும் இனியா, வாகை சூடவா படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஜேம்ஸ் கார்த்திக் தயாரிப்பில், துரைமுருகன் இயக்கவுள்ள திரைப்படம் "சீரன்". இதில் இனியாவுக்கு ஜோடியாக ஜேம்ஸ் கார்த்திக் நடிப்பதாகவும், மேலும் சென்ராயன், ஆடுகளம் ரமேஷ் ஆகியோரின் நடிப்பும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் பேசிய இனியா, "ஜேம்ஸ் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமாவதால் அவருக்காக நான் நடிப்பில் அட்ஜஸ்ட் செய்யவேண்டுமோ என்று பயந்தேன். ஆனால் அவர் என்னைப் போல் ரீடேக் கேட்காமல் நடித்தார்" என்று இனியா கூறியுள்ளார்.