#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
மூத்த நடிகை ஜெயபிரதாவுக்கு சிறை.. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய வழக்கு.!

நடிகை ஜெயபிரதா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரையில் நடித்து பிரபலம் அடைந்தவர். இவர் ஒரு முன்னாள் எம்பி. இவர் சென்னையை சேர்ந்த ராஜ் பாபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து அண்ணா சாலையில் ஒரு திரையரங்கை நடத்தி வந்தார்.
அந்த திரையரங்கில் வேலை செய்த தொழிலாளர்களிடம் இ.எஸ்.ஐ பணமானது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அந்த பணமானது தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் செலுத்தபடவில்லை.
இது குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று இதற்கான விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர் அரசியல் காப்பீட்டு கழக வழக்கறிஞர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டபின் ஜெயப்பிரதா, ராஜ் பாபு மற்றும் ராம்குமார் மூன்று பேருக்கும் ரூ.5000 அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.