மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகரின் மனைவி.! யார் தெரியுமா? வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக,சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் ரஜினிகாந்தின் தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜீவிதா 80,90களில் பிரபல நடிகையாக இருந்தவர். அவர் பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துக்கொண்டார். பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் லால் சலாம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு மார்ச் 7ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.