மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்ரீதேவி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுமி எந்த பிரபல நடிகை தெரியுமா.?
தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்தவர் ஜோதிகா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் ஜோதிகா.
இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட ஜோதிகா, தற்போது மீண்டும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' எனும் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து பலர் பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா.
இது போன்ற நிலையில், ஜோதிகாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் 80களின் முன்னணி நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.