மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. என்னம்மா வளந்துட்டாங்க! அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காரே! நடிகை ஜோதிகாவின் மகளை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்தான்.
அவர் ரஜினி, கமல், அஜித் விஜய் என பல பிரபலங்களுடன் இணைந்து எக்கசக்கமான படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யா, ஜோதிகா இருவருமே திருமணத்திற்கு முன்பு ஒன்றாக இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், உயிரிலே கலந்தது, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்களான இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஜோதிகா தனது மகன் மற்றும் மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் தியா அப்படியே அவரது அம்மாவை உரித்து வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.