மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெய்ட்ரா.. சூர்யாவுக்கே டப் கொடுத்து அசத்தும் ஜோதிகா.. கலக்கல் வீடியோ வைரல்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது வரை பல படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதன் பின் பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து வந்த ஜோதிகா - சூர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கதையின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிகை ஜோதிகா நடித்துவந்தார்.
இந்நிலையில் பிரபல நடிகரான மம்முட்டியுடன் அடுத்த படத்தில் இணைந்து நடிக்கும் ஜோதிகா, கடுமையான ஒர்க் அவுட் பயிற்சியில் இறங்கியுள்ளார். தனது கணவர் சூர்யாவின் ஜிம் ஒர்கவுட்டை மிஞ்சும் அளவிற்கு கடுமையாக இவர் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.