பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட நடிகை கல்யாணிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா!! வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்...
தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான அள்ளித்தந்த வானம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை கல்யாணி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சின்னத்திரை பக்கம் களமிறங்கிய கல்யாணி ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பின்னர் தொகுப்பாளராகவும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் நடிகை கல்யாணி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. தற்போது கல்யாணியின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.