ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.! நடிகை கல்யாணி பிரியதர்ஷினிக்கு ஏற்பட்ட காயம்.! வருத்தத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். அவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியினரின் மகள் ஆவார். கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் புத்தம் புது காலை என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் அவரது நடிப்பில் வெளிவந்த ஹ்ருதயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவர் தற்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் உருவாகும் ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கடந்த மே மாதம் இதன் தொடங்கிய படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்திற்கான ஆக்சன் காட்சி ஒன்று அண்மையில் ஷூட் செய்யப்பட்டது. அதில் கல்யாணி பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். அப்பொழுது அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.