குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"அட! கனகாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறாரே!" வைரலாகும் போட்டோ !
1989ம் ஆண்டு "கரகாட்டக்காரன்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள கனகா, 80 - 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, பிரபு, ராமராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் கனகா.
அப்போதைய காலக்கட்ட படங்களில் கனகா பெரும்பாலும் ரெட்டை ஜடையில் தான் இருப்பார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். கடைசியாக 2006ம் ஆண்டு வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் கனகாவைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளி வரவில்லை. "நீ எப்போது வெளியே வருவாய் என்று நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று இயக்குனர் கங்கை அமரன் கூட ஒரு முறை உருக்கமாக கனகாவைப் பற்றி கூறியிருந்தார்.
சமீபத்தில் கனகாவின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவர் பாழடைந்த வீட்டில் இருப்பதாகவும், வெளியே வருவதே இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது வலைதள பக்கத்தில் கனகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.