மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கணவருடன் பாரிசில் ஹனிமூன் கொண்டாடும் புதுப்பொண்ணு கார்த்திகா!"
முன்னாள் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு "ஜோஷ்" என்ற தெலுங்குப் படத்தில் தான் முதலில் அறிமுகமானார்.
இதையடுத்து 2011ம் ஆண்டு "கோ" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் அன்னக்கொடி, டீல், புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்திகா, மகரமஞ்சு, தம்மு, பிருந்தாவனா உள்ளிட்ட மலையாள மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இவருக்கு சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவருடன் திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில், தனது கணவருடன் பாரிஸ் சென்றுள்ளார் கார்த்திகா.
அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் "உங்களை எனது என்று அழைக்கத் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. வாழ்க்கையை உங்களுடன் சேர்ந்து பயணிக்கப் போகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார் கார்த்திகா.