திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இருட்டில் லிப்-லாக், பாத்ரூமில் கொஞ்சல்.. இதையெல்லாம் கமல் கேட்கலையே.! வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 42 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பாவா செல்லத்துரை , விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில பெண் போட்டியாளர்கள் கூறிய நிலையில் அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.
ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுப்பாளரான கமல் அதனை தீர விசாரிக்காமல் முடிவெடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்து நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார். அவர் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டில் பிரதீப் மகாத்மாவும் கிடையாது, அதேபோல் மாயா, பூர்ணிமா ஆகியோர் அன்னை தெரசாவும் கிடையாது.
பிக்பாஸில் நடக்கும் சண்டை பாதி உண்மை, பாதி பொய். அங்கு நடக்கும் என்டர்டைன்மென்ட் அனைத்தையும் மக்களுக்கு காண்பிப்பதில்லை. கமல் மட்டும்தான் அதனை பார்த்திருப்பார். ஆனால் அதை அவர் வெளியே சொல்ல மாட்டார். ஒரு பெண்ணை வர்ணிப்பது தவறு கிடையாது.ஆனால், வேலைக்காரி மாதிரி இருக்கா? என்றெல்லாம் சொல்லகூடாது. உங்க வீட்டு பெண்ணை பார்த்து கூட அப்படி சொல்ல கூடாது.
இருட்டில் லிப்லாக், பாத்ரூமில் கொஞ்சல் இதெல்லாம்தான் காட்டவில்லை. மாயாவை பற்றி எனக்கு தெரியும். பிரதீப் செய்த காரியம் அவரை மட்டுமல்ல, அவருடைய பெற்றோரையும் சேர்த்து அசிங்கப்படுத்தியுள்ளது. அது அவருக்கு புரியவில்லை. மேலும் மாயா தனது உள்ளாடைகளை எடுத்து நிக்ஷனுக்கு காட்டிவிட்டு அதனை சும்மா காமெடிக்கு என சொன்னார். ஆனால், அதனை கமல் சார் தட்டிக் கேட்கவே இல்லை என்று கூறியுள்ளார்.