மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி இவர்தான் அடுத்த முல்லை.. அப்படியே சித்ரா மாதிரியே இருக்காரு பாருங்க.. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை காவியா ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை செய்தி இன்றுவரை அவரது ரசிகர்களால் நம்ப முடியாத, என்றுகொள்ளமுடியாத ஒரு செய்தியாகவே உள்ளது.
சித்ராவின் இழப்பு மிகப்பெரிய இழப்பு என்றாலும் அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவை விட முல்லை கதாபாத்திரத்தை யாராலும் அழகாக நடிக்க முடியாது என்பது ரசிகர்களின் எண்ணம்.
இருப்பினும் வேறொரு நடிகையை தான் நடிக்க வைக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் இருக்கும் சீரியல் குழுவினர் வேறொரு நடிகையை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அவர் வேறுயாரும் இல்லை விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவ்யா என்பவர் தற்போது முல்லையாக நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு தளத்தில் முல்லை வேடத்தில் இருக்கும் காவியாவை பார்க்கும்போது ஓரளவிற்கு சித்திரா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பதிவிடுவருகின்றனர்.