மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏங்க இப்பிடி.. எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.. வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்..!
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பின் குயின் என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பல படத்திலும் இவர் தொடர்ந்து நடித்து தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதற்கிடையில் கேரள தொழிலதிபரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாகவும், துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் பல தகவல்கள் உலா வந்தன.
இதற்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், "என் திருமணத்தில் என்னை விட பிறர் அதிகமாக ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைதளத்தின் மூலமாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள்" என்று கூறியுள்ளார்.