#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருப்பதற்கு அந்த பிரபலம் தான் காரணம்".. மனம் திறந்த நடிகை கௌசல்யா.!
கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். முதன் முதலில் மலையாள சினிமாவில் அறிமுகமானார் கௌசல்யா.
இவர் அறிமுகமான முதல் படமே வெற்றியடைந்ததால் இதன் பின் தமிழில் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து இளைய தளபதி விஜயுடன் 'நேருக்கு நேர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார் கௌசல்யா. இது போன்ற நிலையில், கவுசல்யாவிற்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணமாகவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து சமீபத்தில் இவரளித்த பேட்டியில் இவருக்கு இன்னும் திருமணமாகாததை குறித்து பேசியிருந்தார். கௌசல்யா கூறியதாவது, "இனிமேல் யாரையும் காதலித்து திருமணம் செய்வேனா என்று தெரியவில்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கை முழுவதும் என் பெற்றோருடன் சந்தோஷமாக வாழப் போகிறேன்" என்று கூறியிருக்கிறார். மேலும் எனக்கு திருமணமாகாமல் இருப்பதற்கும், அந்த கிரிக்கெட் வீரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இவ்வாறு தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.