#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல்! இரங்கல் தெரிவித்த நடிகை குஷ்பூ!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2020 தொடரில் கலந்துகொள்ள துபாய் சென்றார். ஆனால் அங்கிருந்து அவசர அவசரமாக இந்தியா திரும்பிய அவர் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து நீங்கினார்.
தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த சுரேஷ் ரெய்னா, பஞ்சாப்பில் தனது மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதில், மாமா உள்பட இருவர் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்தார்.
Deepest condolences.. May god give the strength to you and your family to cope with the pain. Take care. Hugs .. https://t.co/sYaoFGGj3X
— KhushbuSundar ❤️ (@khushsundar) September 1, 2020
ஆனால் அன்றிரவு உண்மையில் என்ன நடந்தது, யார் இதை செய்தார்கள் என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. பஞ்சாப் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரெய்னாவின் ட்விட்டை குறிப்பிட்டு ட்விட் செய்துள்ள நடிகை குஷ்பூ, " ஆழ்ந்த இரங்கல் .. வலியைச் சமாளிக்க கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பலத்தைத் தருவார். கவனித்துக் கொள்ளுங்கள். ஹக்ஸ்" என பதிவிட்டுள்ளார்.