மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆத்தங்கர மரமே பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடிய நடிகை.. இப்ப எப்படி இருக்கிறாங்க தெரியுமா?!"
1991ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் "புது நெல்லு புது நாத்து" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி நம்பியார். இவர் தொடர்ந்து தூரத்து சொந்தம், பட்டாம் பூச்சிகள், துருவம், புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அஸ்வினி, பாரதிராஜாவின் "கிழக்குச் சீமையிலே" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதிலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற "ஆத்தங்கர மரமே" என்ற பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
தமிழ் ரசிகர்களுக்காக தனது பெயரை 'ருத்ரா' என்று மாற்றிக்கொண்டு தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், சிங்கப்பூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டிலாகி விட்டார். தற்போது ருத்ரா சிங்கப்பூரில் தொலைக்காட்சித் தொடர்களிலும், குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது அதில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் ருத்ரா, தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் படு மாடர்னாக இருக்கும் இவரைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர்.